ஒருநாளைய வர்த்தகத்திற்கான சிறந்த நேரம் அளவு

ஒருநாளைய வர்த்தகம் என்று வரும்பொழுது, பழைய பழமொழியான  “குறைவே நிறைவுஎன்பது பொருத்தமாக இருக்கும். பொதுவாக, ஒரு நாள் முழுக்க, பங்குகளை வாங்க மற்றும் விற்பதற்கு  எதிராக இருப்பதென்பது , இந்த ஒரு நாளைய வர்த்தகத்தில் ஒரு சில மணி நேரங்களிலேயே செய்யும்படி இருப்பது புத்திசாலித்தனமாகக் கருதப்படலாம்ஒவ்வொரு நாளும் அர்ப்பணிப்பும் திட்டரீதியான தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரங்களில் செய்யும் வர்த்தகமானது பங்குகள், குறியீட்டு எதிர்காலங்கள் மற்றும் இடிஎஃப்களுடன் பணியாற்றும் வர்த்தகர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒருநாளைய வர்த்தகத்திற்கான சிறந்த நேரம் 

நீண்ட கால ஒருநாளைய  வர்த்தகர்களுக்கு சிறந்த நேர அளவைக்  கண்டறிவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. முக்கியமான சந்தை செயல்பாட்டினை  அவர்கள் அறிந்துகொள்வதால் , இந்த மணிநேரங்களைப் பயன்படுத்துவது உங்களுடைய  திறனை அதிகரிக்க உதவும்.இதற்கு மாற்றாகநாள் முழுவதும் வர்த்தகம் செய்பவர்கள், பிற விஷயங்களுக்கு மிகவும் குறைந்த நேரத்தை பெறுகிறார்கள், அதுவும் போதுமான வெகுமதி இல்லாமல்அனுபவம் பெற்ற ஒரு நாளைய வர்த்தகர்கள் கூட இந்த வர்த்தக நேரத்தில் வெளியே வர்த்தகம் செய்வதன் மூலம் தங்கள் பணத்தை இழக்கக்கூடும்.. இது கேள்வியை எழுப்புகிறது; ஒரு நாளைய வர்த்தகத்திற்கான  சிறந்த நேர வரையறை என்ன?பதில்: 9:30 முதல் 10:30 am(ஏஎம் ) வரை.

நான் முதல் பதினைந்து நிமிடங்களில் வர்த்தகம் செய்ய வேண்டுமா?

பங்குச் சந்தை துவங்கிய ஒன்று முதல் இரண்டு மணிநேரங்கள் ஒரு நாளைய வர்த்தகத்திற்கான சிறந்த நேரமாகும். இருப்பினும், இந்தியாவில் 9:15 am (ஏஎம் ) முதல் பெரும்பாலான பங்குச் சந்தை வர்த்தகத்  துறைகள் திறக்கப்படுகின்றன. எனவே, ஏன் 9:15 முதலே  தொடங்கக்கூடாது? நீங்கள் ஒரு தொடர்  வர்த்தகராக இருந்தால், முதல் 15 நிமிடங்களுக்குள் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தாக  இருக்காது. புதிய  நபர்களுக்கு, 9:30 வரை காத்திருக்கப்  பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள காரணம் எளிமையானது; சந்தை திறந்த முதல் சில நிமிடங்களில், முந்தைய இரவு நிலவரத்திலேயே  பங்குகள் பிரதிபலிக்கும் .

வர்த்தகங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட திசையில் கூர்மையான விலை இயக்கங்களை காண்பிக்கும். பழைய செய்திகளின் அடிப்படையில் மக்கள் தங்கள் விருப்பங்களை செய்கிறார்கள் என்பதால், இதுடம்ப் மணி நிகழ்வுஎன்று அழைக்கப்படுகிறது. தொடர் வர்த்தகர்கள் முதல் 15 நிமிடங்களுக்குள் சில மதிப்புமிக்க வர்த்தகங்களை செய்யலாம். அவர்கள் பொதுவாக மிகவும் அதிகமான அல்லது குறைந்த விலைப்  புள்ளிகளைப்  பயன்படுத்தி எதிர் திசையில் அதைத்  திரும்பப் பெறுகிறார்கள். டம்ப் மணி நிகழ்வைப் பற்றி ஒருபோதும் கேள்விப்படாதவர்கள் அல்லது திட்ட ரீதியாக செயல்படும் தொடர் வர்த்தகர்கள்  இதனை எதிராகத்  திருப்பி செயல்படுத்தும்பொழுது  சந்தையானது மிகவும் சூடுபிடிக்கிறது . எனவே, 9:15 மணிக்கே வர்த்தகத்தில் இறங்குவதை விட 9:30 வரை காத்திருப்பது என்பதே பாதுகாப்பானது.

சந்தையின் தொடக்கத்தில் வர்த்தகம்

சந்தையின் நிலையற்ற தன்மை முழுதும்  மோசமானதாக  இல்லை. இந்த ஆரம்ப தீவிர வர்த்தகங்கள் ஏற்பட்ட பின்னர் புதிய வர்த்தகர்களுக்கான  சிறந்த தன்மையானது சந்தையில் ஏற்படுகிறது. ஆக, இதுவே வர்த்தகம் செய்வதற்கான சரியான நேர வரையறையாக  9:30 am ( எம்)முதல் 10:30 AM( எம்) வரையிலான நேரத்தை உருவாக்குகிறது. சந்தை திறந்த முதல் சில மணிநேரங்களில் ஒருநாளைய  வர்த்தகமானது  பல நன்மைகளைக் கொண்டுள்ளது:

பங்கு சந்தையில் முதல் ஒரு மணிநேரமானது  வழக்கமாக மிகவும் அதிகமான ஏற்ற இறக்கமானதாக இருக்கும், இது நாளின் சிறந்த வர்த்தகங்களைச் செய்வதற்கான போதுமான வாய்ப்பை வழங்குகிறது.

முதல் ஒரு மணிநேரமானது சந்தையில் உள் நுழைவதற்கும்  வெளியேறுவதற்கும் தேவையான பணப்புழக்கத்தை வழங்குகிறது. பணமாக்கும் பங்குகள் அதிக அளவில் இருக்கும்,எனவே அவற்றை விரைவாக விற்கவும்  முடியும்.

முதல் மணிநேரத்தில் வர்த்தகம் செய்யப்பட்ட அல்லது வாங்கப்பட்ட பங்குகள் முழு வர்த்தக நாளின் மிகப்பெரிய நடவடிக்கைகளாகக்  கருதப்படுகின்றன. இதைச்சரியாக செய்திருந்தால், இதுவே  வர்த்தக நாளின் பிற கால வரம்புகளுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானங்களை கொடுக்க முடியும். தவறாகச் செய்யப்பட்டிருந்தால், இழப்புகள் மிகப்பெரியதாக இருக்கலாம்.

– 11 AM( எம்)க்கு பிறகு, வர்த்தகங்கள் பொதுவாக நீண்டதாகவும் சிறிய அளவுகளிலேயே நடைபெறும்; 3:30pm(பிஎம்)க்கு முன்னதாகவே  தங்கள் பரிமாற்றங்களை முடித்துக்கொள்வது  ஒருநாளைய வர்த்தகர்களுக்கு உகந்தது; இல்லையெனில் இதுவே மோசமான வர்த்தக நேரமாக அமைந்துவிடும். உங்களுக்கு மேலும் நேரம் தேவைப்பட்டால், இந்த அமர்வை 11 am( எம்)வரை நீட்டிப்பது மதிப்புள்ளது. இருப்பினும், ஒருவரின் வர்த்தகங்களை முதல் ஒருமணிநேரத்திற்கு உள்ளாகவே வரையறுப்பது  சிறந்தது.

முக்கிய குறிப்புகள் உங்கள் கவனத்திற்கு 

9:30 முதல் 10:30 வரையிலான வரம்பு ஒவ்வொரு வர்த்தகருக்கும் பின்பற்ற வேண்டிய கட்டாய  விதி அல்ல. இது பொதுவாக புதிய வர்த்தகர்களுக்கு பொருத்தமானது, ஆனால் சொந்த தேவைகளுக்காக மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இதை கருத்தில் கொள்வது மிகவும் சிறந்தது.

உதாரணமாக , ஒருநாளைய வர்த்தகத்திற்கான சிறந்த நேர வரம்பை பயன்படுத்துவது போலவே , வாரத்தின் சிறந்த நாளையும்  மனதில் வைத்திருப்பது சிறப்பாக இருக்கும். திங்கள் கிழமையின் பிற்பகல் நேரமானது  எப்பொழுதும் சந்தையில் பங்குகளை வாங்குவதற்கு விருப்பமான நேரமாகும், ஏனெனில் இது நீண்ட காலமாகவே வர்த்தக வாரத்தின் தொடக்கத்தில், பங்குகளைக்  குறைக்கச்செய்கிறது . நிபுணர்கள்  திங்கள் கிழமை வர்த்தக இறக்கத்திகு முன்னதாக, பங்குகளை வெள்ளியன்றே விற்பதற்கு பரிந்துரைக்கின்றனர்.

கூடுதலாக, ஒவ்வொரு வர்த்தகரும் இந்த  முதல் ஒரு மணிநேரத்தில் செயல்படத்  தேவையில்லை. வர்த்தக நாளில் பல வர்த்தகங்களை மேற்கொள்ளும் நபர்கள்  இந்த  குறுகிய கால வரம்பை தேர்வு செய்யலாம். மாற்றாக, ஒரு நாளைக்கு ஒரு சில வர்த்தகங்களை மட்டுமே செய்யும் ஒருநாளைய  வர்த்தகர்கள் நீண்ட நேர வரையறையை  தேர்வு செய்யலாம்அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்  என்பதைப் பொறுத்து, பல்வேறு நாட்களில் அவர்களின் நேர வரம்பை மாற்றவும் செய்யலாம்.

Learn Free Trading Course Online at Smart Money with Angel One.