ஒரு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் என்றால் என்ன & அதை எப்படி வாங்கலாம்?

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் என்பது நிதியில் உள்ள பங்கு மீதான உரிமையைக் குறிக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டின் மதிப்பு நிகர சொத்து மதிப்பு எனப்படுகிறது மற்றும் இது ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் கணக்கிடப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான மிகவும் சாதகமான வழிகளில் ஒன்று. இந்த நிதிகள் பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து, ஈக்விட்டி பங்குகள் முதல் கடன் ஆவணங்கள் வரையிலான பத்திரங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிதிகள் பல்வேறு பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், அவை இயல்பாகவே பல்வகைப்படுத்தலை அளிக்கின்றன. மேலும், சந்தை அபாயத்தையும் ஒரு குறிப்பிட்ட அளவு குறைக்கின்றன. பொதுவாக, பெரும்பாலான முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று.

பல முதலீட்டாளர்கள் போல, நீங்களும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினால், தொடர்புடைய பல்வேறு விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையில், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் பொருள், மியூச்சுவல் ஃபண்டில் ஒரு யூனிட்டின் விலை எப்படி கணக்கிடப்படுகிறது மற்றும் அவை ஈக்விட்டி பங்குகளிலிருந்து எப்படி வேறுபடுகின்றன என்பதை அறிந்துகொள்வோம்.

மியூச்சுவல் ஃபண்டில் ஒரு யூனிட் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்டில் ஒரு யூனிட் என்பது நிதியில் உள்ள பங்கு மீதான உரிமையைக் குறிக்கிறது. நீங்கள் மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்களை வைத்திருந்தால், அந்த நிதி சொத்துக்களின் ஒரு பகுதியை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதே அதன் பொருள். அதாவது, மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் நிதி மீதான உரிமையை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் நிதியின் கீழ் உள்ள பத்திரங்களில் அல்ல என்பதை புரிந்து கொள்வது முக்கியம்.

எடுத்துக்காட்டாக, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அதன் சொத்துக்களில் 30% கடன் ஆவணங்கள், 20% நிறுவனம் A, 20% நிறுவனம் B, 30% C நிறுவனத்திலும் முதலீடு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது மேற்கண்ட நிதியின் ஒரு யூனிட்டை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால், மேற்கண்ட சதவீதத்தில் அனைத்து நிதி சொத்துக்களிலும் ஒரு பகுதி உங்களுக்கு சொந்தமாகிறது.

ஓபன் எண்டெட் மியூச்சுவல் ஃபண்ட் நிகழ்வில், உருவாகக்கூடிய அதிகபட்ச யூனிட்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஒரு புதிய முதலீட்டாளர் நிதிக்கு சந்தா செலுத்தும் போது அதிக யூனிட்களை உருவாக்குகிறது. குளோஸ்-எண்டெட் மியூச்சுவல் ஃபண்ட் நிகழ்வில், அதிகபட்ச எண்ணிக்கையிலான யூனிட்கள் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட அனைத்து யூனிட்களும் சந்தா சேர்ந்தவுடன், வெளியீடு மூடப்படும். முதலீட்டாளர்களிடமிருந்து மேலும் எந்த சந்தாக்களும் பெறப்படாது.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டின் விலை எப்படி செயல்படுகிறது?

இப்போது உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் பொருளை அறிந்திருப்பீர்கள், அவற்றின் மதிப்பு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

ஈக்விட்டி பங்குகளைப் போலவே, மியூச்சுவல் ஃபண்டின் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ஒரு மதிப்பு ஒதுக்கப்படும். மதிப்பு, என அறியப்படுவது நிகர சொத்து மதிப்பு அல்லது NAV ஆகும். இது பின்வரும் கணித சூத்திரத்தைப் பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகிறது.

நிகர சொத்து மதிப்பு = [(நிதியில் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு – நிதியில் உள்ள கடன்களின் மொத்த மதிப்பு) ÷ நிதியில் உள்ள மொத்த யூனிட்களின் எண்ணிக்கை]

இங்கு, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டின் விலை எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஈக்விட்டி மற்றும் கடன் ஆவணங்கள் வடிவில் ₹200 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நிர்வாகச் செலவுகள், நிதி மேலாளருக்கான கட்டணம் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் தரகு செலவுகள் உட்பட அனைத்து சாத்தியமான செலவுகளையும் சேர்த்து, ஃபண்டின் மொத்த கடன்கள் சுமார் ₹20 லட்சம் வரை உள்ளது. கணக்கிடப்பட்ட தேதியின் படி மியூச்சுவல் ஃபண்டில் உள்ள மொத்த யூனிட்களின் எண்ணிக்கை 4 லட்சம்.

மேலே குறிப்பிடப்பட்ட சூத்திரத்தில் இந்த மதிப்புகளைப் பதிலீடு செய்யும் போது, அது நிகர சொத்து மதிப்பு அல்லது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுக்கான மதிப்பை அளிக்கும்.

நிகர சொத்து மதிப்பு = ₹45 யூனிட் [(₹200 லட்சம் – ₹20 லட்சம்) ÷ ₹4 லட்சம்]

மியூச்சுவல் ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. உண்மையில், இது நிதியின் அடிப்படை சொத்துக்களின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக, நிதியின் அடிப்படைப் பத்திரங்களின் மதிப்பு அதிகரித்தால், நிதியின் NAVயும் அதிகரிக்கலாம். மாறாக, நிதியின் பத்திரங்களின் மதிப்பு குறைந்தால், நிதியின் NAVயும் குறையலாம்.

மேலும், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) படி, ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் தங்கள் நிதிகளின் NAVயைக் கணக்கிட்டு வெளியிடுவது கட்டாயம்.

மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை எப்படி வாங்கலாம்? 

ஒரு முதலீட்டாளராக, உங்களுக்கு ஒரு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை எப்படி வாங்கலாம் என்பது தெரிய வேண்டும். இங்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறையின் அறிமுகத்தைப் பார்க்கலாம்.

  • படி 1: ஏஞ்சல் ஒன்-ல் ஒரு டீமேட் கணக்கைத் திறங்கள்.
  • படி 2: உங்கள் பயனர் சான்றுகளை வைத்து உங்கள் வர்த்தகக் கணக்கில் உள்நுழையுங்கள்.
  • படி 3: ஏஞ்சல் ஒன் போர்ட்டலில் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவுக்கு செல்லுங்கள்.
  • படி 4: உங்கள் முதலீடுசெய்ய விரும்பும் மியூச்சுவல் ஃபண்ட்டைத் தேடுங்கள்.
  • படி 5: நீங்கள் வாங்க விரும்பும் யூனிட்களின் எண்ணிக்கையைப் பெற ஒரு பை ஆர்டரை வைத்திடுங்கள். பை ஆர்டர் வைப்பதற்கு முன், உங்கள் வர்த்தகக் கணக்கில் போதுமான தொகை உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.

உங்கள் கோரிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதும், இணைக்கப்பட்ட டீமேட் கணக்கிற்கு நீங்கள் வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் வரவு வைக்கப்படும்.

இதற்கு மாறாக, உங்களிடம் டிமேட் மற்றும் வர்த்தக கணக்கு இல்லையென்றாலும் ஒரு மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்களை வாங்கலாம். இந்த நிகழ்வுகளில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் தேவையான ஆவணச் சான்றுகள் மற்றும் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையுடன் ஒரு சந்தா படிவத்தைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதும், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் ஒதுக்கப்படும் மற்றும் உங்கள் முதலீட்டின் விவரங்ககள் கொண்ட ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையைப் (CAS) பெறுவீர்கள்.

இப்போது, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்கும் முன் நீங்கள், கவனத்தில் வைக்க வேண்டிய மற்றொரு முக்கிய காரணி உள்ளது. அதாவது நிகர சொத்து மதிப்பு. உங்களுக்கு ஒதுக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் NAV ஆனது மியூச்சுவல் ஃபண்ட்டின் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ ஃபண்ட் நிறுவனத்திற்கு நிதிகள் மாற்றப்படுகிறதா என்பதைப் பொறுத்தது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக நிதிகள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டால், முந்தைய நாளின் NAV-ன் படி யூனிட்கள் வழங்கப்படும். இல்லையெனில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு நிதிகள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டால், தற்போதைய நாளின் NAV-ன் படி யூனிட்கள் வழங்கப்படும். இது வர்த்தக நேர முடிவில் மட்டுமே கணக்கிடப்படும்.

ஈக்குவிட்டி பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் இடையேயான வேறுபாடு 

தொடக்கத்தில், ஈக்குவிட்டி பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் இடையே பல பொதுவான ஒற்றுமைகளைக் இருப்பது போல தெரியலாம். எனினும், இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளது. அட்டவணையில் இரண்டிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளது.

விவரங்கள் ஈக்குவிட்டி பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள்
உரிமை ஒரு நிறுவனத்தில் இருக்கும் உரிமையைக் குறிக்கிறது பத்திரங்களின் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்போலியோவில் இருக்கும் உரிமையைக் குறிக்கிறது
பல்வகைப்படுத்தல்  ஈக்குவிட்டி பங்குகள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைச் சார்ந்தது. எனவே, பல்வகைப்படுத்தல் இல்லை மியூச்சுவல் ஃபண்ட்கள் வெவ்வேறு பத்திரங்கள் உள்ள பாஸ்கெட்டில் முதலீடு செய்கிறது. அதனால், பல்வகைப்படுத்தல் உள்ளது.
முதலீட்டு அபாயம்  ஈக்குவிட்டி பங்குகளில் பொதுவாக முதலீட்டு அபாயம் அதிகமாக உள்ளது மியூச்சுவல் ஃபண்ட்களின் பல்வகைப்படுத்தல் தன்மையால் பொதுவாக முதலீட்டு அபாயம் குறைவாக உள்ளது
வாக்கு உரிமைகள்  உரிமையாளருக்கு வாக்களிக்கும் உரிமைகள் வழங்கப்படுகிறது உரிமையாளருக்கு எந்த விதமான உரிமைகளும் வழங்கப்படாது
ஏற்ற இறக்க தன்மை ஈக்குவிட்டி பங்குகள் அதிக ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுகிறது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் NAV ஈக்குவிட்டி பங்குகள் போல அதிக ஏற்ற இறக்கங்களுக்கு உட்படாது
விற்கப்படும் தன்மை விற்கப்படும் தன்மை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் விற்கப்படும் தன்மை கொண்டவை மற்றும் எந்த நேரத்திலும் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்

முடிவுரை 

இதன் வாயிலாக, மியூச்சுவல் ஃபண்டில் ஒரு யூனிட் என்றால் என்ன? அதன் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு இருப்பீர்கள். இப்போது, நீங்கள் ஒரு நிதியில் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்கள் என்றால், நிதியை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு பரிவர்த்தனை செய்யும் போது உங்களுக்கு ஒதுக்கப்பட்ட NAV அதற்கேற்ப மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் முந்தைய நாளின் NAV-படி யூனிட்களைப் பெற விரும்பினால், நிதிக்காக வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு முன் நிதிகள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், தற்போதைய நாளின் NAV-படி யூனிட்கள் வழங்கப்படும். அது வர்த்தக நாள் முடிந்த பிறகு மட்டுமே கணக்கிடப்படும்.

ஏஞ்சல் ஒன்-ல் இலவசமாக ஒரு டீமேட் கணக்கைத் ஆரம்பித்து சிறந்த மியூச்சுவல் ஃபண்ட்களை ஆராயுங்கள்.

FAQs

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டின் மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

ரு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டின் மதிப்பு, நிகர சொத்து மதிப்பு (NAV)  என்றும் அழைக்கப்படுகிறது. இது நிதி செலுத்த வேண்டிய கடன்களின் மொத்த மதிப்பை நிதி சொத்துக்களின் மொத்த சந்தை மதிப்பிலிருந்து கழிப்பதன் வாயிலாக கண்டறியலாம். 

அடுத்ததாக, ஒரு யூனிட்டுக்கான NAVயைக் கணக்கிட பெறப்படும் மதிப்பு நிலுவையில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் மொத்த எண்ணிக்கையால் வகுக்கப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டின் மதிப்பை மாற்றலாமா?

ஆம். நிதியின் அடிப்படைப் பத்திரங்களின் சந்தை மதிப்பில் ஏதேனும் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டின் NAV மதிப்பு மாறலாம். எடுத்துக்காட்டாக, ஃபண்டின் அடிப்படைப் பத்திரங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தால், நிதியின் NAV உயரலாம் மற்றும் அதற்கு நேர்மாறாக நடக்கலாம்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட்டில் வாங்கக்கூடிய குறைந்தபட்ச யூனிட்களின் எண்ணிக்கை என்ன?

ஒரு மியூச்சுவல் ஃபண்ட்டில் நீங்கள் வாங்கக்கூடிய குறைந்தபட்ச எண்ணிக்கையிலான யூனிட்கள் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு மற்றும் நிதியின் NAV போன்ற காரணிகளைச் சார்ந்துள்ளது. வெவ்வேறு நிதிகள் வெவ்வேறு வரம்புகளைக் கொண்டிருப்பதால், முதலீடு செய்வதற்கு முன் ஆவணத்தை நன்றாக படித்து பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

ஒரு மியூச்சுவல் ஃபண்ட்டின் யூனிட்களை வாங்குதல் அல்லது விற்பது தொடர்பாக ஏதேனும் கட்டணங்கள் உள்ளதா?

ஆம், நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்கும்போது அல்லது திரும்ப பெறும்போது சில கட்டணங்கள் விதிக்கப்படும். செலவின விகிதம் மற்றும் பரிவர்த்தனை கட்டணங்கள் ஆகியவை நீங்கள் யூனிட்களை வாங்கும் போது விதிக்கப்படும் பொதுவான இரண்டு கட்டணங்கள். அதேசமயம் நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை திரும்ப பெறும்போது எக்ஸிட் லோட் மற்றும் திரும்ப பெறுதல்  கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

மியூச்சுவல் ஃபண்டின் NAV ஒரு நாளில் எத்தனை தடவை கணக்கிடப்படுகிறது?

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) வழிகாட்டுதல் படி, ஒரு மியூச்சுவல் ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு ஒவ்வொரு வர்த்தக நாள் முடிவில் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும்.