இன்றைய பரபரப்பான உலகில், நிதி திட்டமிடல் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக முக்கியத்துவம் கொண்டுள்ளது. சிறந்த சேமிப்பு உத்திகளை வளர்த்துக்கொள்வது என்பது ஒரு நிலையான நிதி எதிர்காலத்தைப் பெறுவதற்கான முதல் படி. எண்ணற்ற முதலீட்டு தேர்வுகள் இருந்தாலும், முறையான முதலீட்டு திட்டங்கள் (SIPs) செல்வத்தை உருவாக்குவதில் அதன் முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையால் தனித்து நிற்கிறது. 2024-ல் உங்கள் பணத்தை வளர்க்க பயன்படுத்த வேண்டிய ஆறு பழக்கங்கள் பற்றி ஆராய்வோம் வாருங்கள்.
தொடர்ச்சி தன்மையை மேம்படுத்துதல்
நிதி பழக்கங்களைத் தொடர்ந்து பராமரித்தல் என்பது பரபரப்பான நவீன வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. SIPகள் ஒரு முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையை வழங்குவதால், தனிநபர்கள் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் முதலீடு செய்ய உதவுகிறது. இந்தத் தொடர்ச்சித்தன்மை உங்கள் வருமானத்தின் ஒரு பகுதி முதலீட்டுக்காக ஒதுக்கப்படுவதை உறுதி செய்வதால், முறைப்படுத்தலை வளர்க்கிறது.
SIP என்றால் என்ன?என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்க
அடையக்கூடிய நிதி இலக்குகளை அமைத்தல்
நிறுவனங்கள் நோக்கங்களை அமைப்பது போல, தனிநபர்களும் தெளிவான மற்றும் அடையக்கூடிய நிதி இலக்குகளை அமைத்துக்கொள்ளலாம். ஒரு கனவு சுற்றுலாவோ, ஒரு வீடு வாங்குவதோ, அல்லது ஒரு அவசர நிதியோ, SIPகள் இந்த நோக்கங்களுடன் ஒத்துபோகிறது. அடையக்கூடிய இலக்குகள் அமைப்பது உங்கள் முதலீடுகளுக்கான வழியை அளித்து, உங்கள் நிதி கனவுகளை நனவாக மாற்றுகிறது.
உங்கள் போர்ட்ஃபோலியோவைப் பல்வகைப்படுத்தல்
சிறப்பான நிதி திட்டமிடலுக்கு ஒரு பல்வகைப்படுத்தபட்ட முதலீட்டு போர்ட்ஃபோலியோ மிகவும் அவசியம். SIPகள் பல்வகைப்படுத்தல், பல்வேறு சொத்து பிரிவுகளில் பரவலாக முதலீடுகளைப் போடுவதை எளிதாக்குகிறது. இந்த அணுகுமுறை ஒற்றை சொத்து பிரிவின் செயல்திறனைச் சார்ந்து இருப்பதைக் குறைப்பதால், நீண்ட கால நிதி வளர்ச்சியை உறுதி செய்கிறது.
வருமானம் மற்றும் செலவுகளை நிர்வகித்தல்
திறன்மிக்க நிதி திட்டமிடல் என்பது வருமானம் மற்றும் செலவுகளை நிர்வகித்து முதலீட்டுக்கான உபரி வருமானத்தை உருவாக்குதல். இதில் செலவைக் கண்காணிப்பது, வரவு செலவு திட்டத்தை உருவாக்குதல், மற்றும் தேவையில்லாத செலவுகளைக் கண்டறிதல் போன்றவை முக்கிய படிகளாக உள்ளது. உங்கள் சேமித்தல் மற்றும் முதலீட்டு பழக்கங்களில் திருப்தி அடையும் வரை வரவு செலவை திட்டத்தைச் சரிசெய்தல் என்பது மிகவும் முக்கியமானது.
கற்றுக்கொண்டே இருத்தல் மற்றும் அதிகாரம் பெறுதல்
SIP செயல்திறனை அவ்வப்போது கண்காணித்தல் மற்றும் சந்தை போக்குகள் பற்றி கற்றுக் கொள்ளுதல் ஒரு முதலீட்டாளராக உங்களுக்கு அதிகாரமளிக்கிறது. உங்கள் அறிவுத்திறன் சிக்கலான நிதி சூழலில், சிறப்பான நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. உங்கள் SIP தொகையைச் சரிசெய்தல், உங்கள் போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்தல், மற்றும் புதிய முதலீட்டு சாத்தியங்களை ஆராய்தல் போன்றவை உங்கள் சிறப்பான நிதிநிலைக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கிறது.
ஒரு வலிமையான நிதி பாதுகாப்பு வலையைக் கட்டமைத்தல்
SIPகள் வாயிலாக ஒரு அவசர கால நிதியைக் கட்டமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இந்த நிதி பணி இழப்பு அல்லது மருத்துவ அவசர நிலைகள் போன்ற எதிர்பாராத சூழல்களில் ஒரு நிதி பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது. SIPகள் வாயிலாக வழக்கமான பங்களிப்புகள் செய்வது வாழ்க்கையின் எதிர்பாராத சூழல்களுக்கு உங்களைத் தயார்படுத்துகிறது.
எடுத்துக்காட்டு
ரமேஷ் எனும் ஒரு தனிநபரை கருத்தில் கொள்வோம். இவர் நீண்ட காலத்தில் செல்வத்தைக் கட்டமைப்பதற்கு SIPகள் வாயிலாக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய விரும்புகிறார். ரமேஷ் SIP வாயிலாக ஒரு பல்வகைப்படுத்தப்பட்ட ஈக்குவிட்டி மியூச்சுவல் ஃபண்ட்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 முதலீட்டை போட முடிவு செய்கிறார்.
ரமேஷின் முதலீட்டுக்கு 12% சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது என்றால் 10 வருட நீண்ட காலத்தில் அந்த நிதி எப்படி வளரும் என்பதற்கான ஒரு உண்மையான பார்வையைக் கருத்தில் கொள்வோம். அது, இந்தியாவில் ஈக்குவிட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வரலாற்று சராசரி வருவாயின் அடிப்படையில் உள்ளது.
SIP # | தொடக்க இருப்பு (Rs) | SIP தொகை (ரூ) | வருவாய்கள் (%) | வருவாய்கள் (ரூ) | இறுதி இருப்பு (ரூ) |
1 | 0.0 | 5,000.0 | 1% | 50.0 | 5,050.0 |
2 | 5,050.0 | 5,000.0 | 1% | 100.5 | 10,150.5 |
3 | 10,150.5 | 5,000.0 | 1% | 151.5 | 15,302.0 |
4 | 15,302.0 | 5,000.0 | 1% | 203.0 | 20,505.0 |
5 | 20,505.0 | 5,000.0 | 1% | 255.1 | 25,760.1 |
116 | 10,80,803.5 | 5,000.0 | 1% | 10,858.0 | 10,96,661.5 |
117 | 10,96,661.5 | 5,000.0 | 1% | 11,016.6 | 11,12,678.1 |
118 | 11,12,678.1 | 5,000.0 | 1% | 11,176.8 | 11,28,854.9 |
119 | 11,28,854.9 | 5,000.0 | 1% | 11,338.5 | 11,45,193.4 |
120 | 11,45,193.4 | 5,000.0 | 1% | 11,501.9 | 11,61,695.4 |
SIPகள் வாயிலாக நெறிப்படுத்தப்பட்ட முதலீட்டில், ரமேஷ் 10 வருடத்தில் மொத்தமாக ரூ. 6 லட்சங்கள் முதலீடு செய்துள்ளார், அது மொத்தமாக ரூ. 11.6 லட்சங்களாக வளர்ந்துள்ளது.
உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க தொடர்ச்சி தன்மை, அடையக்கூடிய இலக்குகள், போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தல், கற்றுக்கொண்டே இருத்தல், மற்றும் அவசர கால நிதியைக் கட்டமைத்தல் போன்றவை முக்கிய கூறாக உள்ளது. SIPகள் வெற்றிக்கான உங்கள் பயணத்தில் நம்பகமான நண்பர்களாக இருக்கட்டும், ஒரு சமயத்தில் ஒரு நெறிப்படுத்தப்பட்ட படியாக உள்ளது. சிறு நீர் துளிகள் பெரிய கடலை உருவாக்குவது போல, வழக்கமான SIPகள் நீண்ட காலத்தில் உங்கள் செல்வத்தைச் சேர்க்க உதவுகிறது.