பான் (PAN)-க்கான ஏ.ஒ. (AO) குறியீடுகள் என்றால் என்ன மற்றும் அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது?

பான் (PAN) கார்டுகளுக்கான ஏ.ஒ. (AO) குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - வருமான வரித்துறையின் தனித்துவமான அடையாளங்காட்டும் எண் ஆகும். கூறுகள், வகைகள், ஆன்லைனில் கண்டுபிடித்தல் மற்றும் அது ஒரு தனிநபருக்கு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் புர

ஒரு புதிய பான் (PAN) கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, நிரப்பப்பட வேண்டிய ஒரு முக்கியமான இடம் ஏ.ஒ. (AO) குறியீடு ஆகும். ஒரு பான் (PAN) (நிரந்தர கணக்கு எண்) அட்டையில் ஏ.ஒ. (AO) (மதிப்பீட்டு அதிகாரி – Assessing Officer) குறியீடு என்பது இந்திய வருமான வரித் துறையால் ஒதுக்கப்பட்ட தனித்துவமான எண் அடையாளமாகும். பான் (PAN) க்கான ஏ.ஒ. (AO) குறியீடு வரிப்பணம் செலுத்துபவர்களுக்கு அவர்களின் புவியியல் இடத்தின் அடிப்படையில் வகைப்படுத்த உதவுகிறது மற்றும் வரி தொடர்பான விஷயங்களை திறம்பட மதிப்பீடு செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் வரி அதிகாரிகளுக்கு உதவுகிறது.

இந்தக் கட்டுரையில், உங்கள் ஏ.ஒ. (AO) குறியீடு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதுடன், உங்கள் ஏ.ஒ. (AO) குறியீட்டை ஆன்லைனில் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பான் (PAN) கார்டுக்கான ஏ.ஒ. (AO) குறியீட்டின் கூறுகள்

ஒரு ஏ.ஒ. (AO) குறியீட்டில் வரிப்பணம் செலுத்துபவரின் (நிறுவனம் அல்லது தனிநபர்) அதிகார வரம்பை தனித்துவமாக அடையாளம் காணவும், திறமையான வரி நிர்வாகத்தை எளிதாக்கவும் உதவும், பல கூறுகள் உள்ளன. இந்த அனைத்து கூறுகளும் இணைக்கப்படும் போது, அவை ஒவ்வொரு வரிப்பணம் செலுத்துபவருக்கும் ஒரு தனித்துவமான ஏ.ஒ. (AO) குறியீட்டை உருவாக்குகின்றன. ஒரு பான் (PAN) கார்டில் ஏ.ஓ. (AO)-வின் கூறுகளில் பொதுவாக இவை அடங்கும்:

  1. பிரதேச குறியீடு: ஒரு நிறுவனம் அல்லது ஒரு தனிநபரின் புவியியல் இடத்தை அடையாளம் காண ஒரு பகுதிக்கு 3 எழுத்துக்களின் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
  2. ஏ.ஒ. (AO) வகை: பான் (PAN) கார்டு வைத்திருப்பவர் ஒரு தனிநபர், நிறுவனம் அல்லது இந்திய குடியிருப்பாளர் அல்லாத ஒரு தனிநபர் என்பதை அடையாளம் காண வரித்துறைக்கு இது உதவுகிறது.
  3. வரம்பு வகை: பான் (PAN) கார்டு வைத்திருப்பவரின் முகவரியின் அடிப்படையில், அவர்கள் வாழும் வட்டாரம் அல்லது வார்டுகளின்படி வரம்பு வழங்கப்படுகிறது.
  4. ஏ.ஒ. (AO) எண்: இது புரோட்டியான் இ-கவ் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Protean eGov Technologies Limited) (முன்னர் என்.எஸ்.டி.எல். (NSDL)) மூலம் நியமிக்கப்பட்ட ஒரு தனித்துவமான எண்ணாகும்.

பான் (PAN) கார்டில் ஏ.ஒ. (AO) குறியீடுகள் வகைகள்

நான்கு வெவ்வேறு வகையான ஏ.ஒ. (AO) குறியீடுகள் உள்ளன மற்றும் ஒவ்வொரு வகையான ஏ.ஒ. (AO) குறியீட்டின் விவரங்கள் பின்வருமாறு:

  1. சர்வதேச வரிவிதிப்பு: இது இந்தியாவில் நிறுவப்படாத அல்லது இந்திய குடியுரிமை இல்லாத நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் பான் (PAN) கார்டுக்கு விண்ணப்பிக்க இது பொருந்தும்.
  2. சர்வதேசம் அல்லாத வரிவிதிப்பு (மும்பை): இது இந்தியாவை தளமாகக் கொண்ட ஆனால் மும்பையில் இல்லாத நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு பொருந்தும்.
  3. சர்வதேசம் அல்லாத வரிவிதிப்பு (மும்பைக்கு வெளியே): இது இந்தியாவை தளமாகக் கொண்ட மற்றும் மும்பையில் உள்ள நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு பொருந்தும்.
  4. பாதுகாப்பு ஊழியர்கள்: இதன் கீழ் உள்ள ஏ.ஒ. (AO) குறியீடுகள், விமானப்படை அல்லது இந்திய இராணுவத்தின் உறுப்பினராக அடையாளம் காணப்படும் தனிநபர்களுக்கு.

ஏ.ஒ. (AO) குறியீடுகளை ஆன்லைனில் எவ்வாறு கண்டறிவது?

என்.எஸ்.டி.எல். (NSDL), யு.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல். (UTIITSL) அல்லது வருமான வரி போன்ற பல்வேறு அரசாங்க போர்ட்டல்களில் ஏ.ஒ. (AO) குறியீடுகளை நீங்கள் ஆன்லைனில் காணலாம்.

என்.எஸ்.டி.எல். (NSDL) இணையதளம் மூலம் ஏ.ஒ. (AO) குறியீட்டை ஆன்லைனில் கண்டறிதல்

என்.எஸ்.டி.எல். (NSDL), இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் ஏ.ஒ. (AO) குறியீட்டைக் கண்டறிய கீழே உள்ள படிநிலைகளை பின்பற்றவும்:

  1. என்.எஸ்.டி.எல். (NSDL) இ-கவ் (e-Gov) போர்ட்டலுக்கு சென்று ஏ.ஒ. (AO) குறியீட்டு பக்கத்தை தேடுங்கள்.
  2. உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் நகரத்தின் ஏ.ஒ. (AO) குறியீடுகளின் பட்டியல் காண்பிக்கப்படும்.
  4. உங்கள் விவரங்களின் அடிப்படையில் சரியான ஏ.ஒ. (AO) குறியீட்டை தேர்ந்தெடுத்து ‘சமர்ப்பி’ மீது கிளிக் செய்யவும்.

யு.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல். (UTIITSL) இணையதளம் மூலம் ஏ.ஒ. (AO) குறியீட்டை ஆன்லைனில் கண்டறிதல்

யு.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல். (UTIITSL) இணையதளம் மூலம் ஏ.ஒ. (AO) குறியீட்டைக் ஆன்லைனில் கண்டறிய கீழே உள்ள படிநிலைகளை பின்பற்றவும்:

  1. யு.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல். (UTIITSL) இணையதளத்திற்கு செல்லவும்.
  2. மெனு பாரில், ‘பான் (PAN) கார்டு சேவைகளை’ கண்டறிந்து ‘ஏ.ஒ. (AO) குறியீடு விவரங்களை தேடு’என்பதை தேர்ந்தெடுக்கவும்’.
  3. சரியான ஏ.ஒ. (AO) குறியீட்டு வகையை தேர்ந்தெடுத்து ‘விவரங்களை காண்க’ மீது கிளிக் செய்யவும்’.
  4. நகரத்தின் எழுத்துக்களின்படி, உங்கள் நகரத்தின் நாமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. அனைத்து கூறுகளுடனும் ஏ.ஒ. (AO) குறியீடுகளின் பட்டியலை நீங்கள் பெறுவீர்கள்.

வருமான வரி போர்ட்டல் மூலம் ஏ.ஒ. (AO) குறியீட்டை ஆன்லைனில் கண்டறிதல்

இது ஏற்கனவே பான் (PAN) கார்டு கொண்ட தனிநபர்களுக்கு மற்றும் தங்கள் ஏ.ஒ. (AO) குறியீட்டை சரிபார்க்க விரும்பும் தனிநபர்களுக்கு.

  1. அதிகாரப்பூர்வ வருமான வரி போர்ட்டலை அணுகவும்
  2. உங்கள் கணக்கில் உள்நுழையவும்
  3. பக்கத்தின் வலது பக்கத்தில் காண்பிக்கப்படும் உங்கள் பெயரை கிளிக் செய்வதன் மூலம் காண்பிக்கப்படும் ‘எனது சுயவிவரம்’ பிரிவிற்கு செல்லவும்.
  4. இடது பக்கத்தில் உள்ள மெனுவில் இருந்து ‘அதிகார வரம்பு விவரங்கள்’-க்கு செல்லவும்
  5. உங்கள் அனைத்து ஏ.ஒ. (AO) குறியீடு விவரங்களையும் நீங்கள் பெறுவீர்கள்

உங்கள் பான் (PAN) கார்டுக்கான ஏ.ஒ. (AO) குறியீடு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

நீங்கள் எந்த வகையான வரி செலுத்துபவர் மற்றும் உங்கள் முகவரியைப் பொறுத்து பான் (PAN) கார்டுக்கான ஏ.ஒ. (AO) குறியீடு தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் ஏ.ஒ. (AO) குறியீடுகளை தீர்மானிக்கும் நிபந்தனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • முதன்மை வருமான ஆதாரம் சம்பளம் அல்லது வணிக வருமானங்கள் மற்றும் சம்பளம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக இருக்கும் தனிநபர் வரி செலுத்துபவர்களுக்கு, ஏ.ஒ. (AO) குறியீடு உத்தியோகபூர்வ முகவரியின் அடிப்படையில் உள்ளது.
  • சம்பளத்தை தவிர வேறு வருமான ஆதாரங்கள் கொண்ட தனிநபர் வரி செலுத்துபவர்களுக்கு, ஏ.ஒ. (AO) குறியீடு வீட்டு முகவரியின் அடிப்படையில் இருக்கும்.
  • இந்து பிரிக்கப்படாத குடும்பம் (ஹெச்.யு.எஃப் – HUF), நபர்களின் சங்கம், தனிநபர்களின் அமைப்பு, அறக்கட்டளை, நிறுவனம், உள்ளூர் அதிகாரம், அரசாங்க அமைப்பு, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (எல்.எல்.பி. – LLP), கூட்டாண்மை நிறுவனம் அல்லது செயற்கை நீதிமன்ற நபருக்காக ஏ.ஒ. (AO) குறியீடு உங்கள் அலுவலக முகவரியின்படி தீர்மானிக்கப்படும்.

முடிவுரை

இந்தியாவில் பான் (PAN) கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஏ.ஒ. (AO) குறியீடு ஒரு முக்கியமான மற்றும் கட்டாயப் பிரிவாகும். வரி வருமானங்களை துல்லியமாக செயல்முறைப்படுத்தவும், மதிப்பீடுகளை நடத்தவும், வரிப்பணம் செலுத்துபவரின் இடம் மற்றும் பிரிவின் அடிப்படையில் பிற வரி தொடர்பான நடவடிக்கைகளை நிர்வகிக்கவும் இது வரி அதிகாரிகளுக்கு உதவுகிறது.

FAQs

பான் (PAN) கார்டில் ஏ.ஒ. (AO) குறியீட்டை நாங்கள் மாற்ற முடியுமா?

ஆம், பான் (PAN) கார்டில் ஏ.ஒ. (AO) குறியீட்டை மாற்ற முடியும். உங்கள் அதிகார வரம்பு, குடியிருப்பு முகவரி அல்லது உங்கள் வரி மதிப்பீட்டை பாதிக்கும் பிற சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டால், குறியீட்டை மாற்றுவது அவசியமாக இருக்கலாம். ஏ.ஒ. (AO) குறியீட்டை மாற்றுவதற்கு, உள்ளூர் அலுவலகத்தை தொடர்புகொள்வதன் மூலம் வருமான வரித் துறைக்கு திருத்தம் அல்லது மாற்றத்திற்கான கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலையற்ற தனிநபர்களுக்கான ஏ.ஒ. (AO) குறியீடு என்ன?

வேலையற்ற தனிநபர்களுக்கு ஏ.ஒ. (AO) குறியீடு இல்லை. எனவே பான் (PAN) கார்டுக்கு விண்ணப்பிக்கும், வேலையற்ற தனிநபர்கள் ஏ.ஒ. (AO) குறியீட்டு பிரிவை காலியாக விட்டுவிட்டு, குறிப்பிட்ட தொகையை விட, குறைவான சம்பளத்தை தேர்வு செய்யலாம்.

மாணவர்களுக்கான ஏ.ஒ. (AO) குறியீடு என்ன?

மாணவர்களுக்கு ஏ.ஒ. (AO) குறியீடு இல்லை. நீங்கள் ஒரு மாணவராக இருந்து பான் (PAN) கார்டுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், நீங்கள் ஏ.ஒ. (AO) குறியீட்டு பிரிவை காலியாக விட்டுவிடலாம். உங்கள் அஞ்சல் குறியீட்டின்படி மதிப்பாய்வு அதிகாரிகளால் ஏ.ஒ. (AO) குறியீடு ஒதுக்கப்படும்.

ஏ.ஒ. (AO) குறியீட்டில் சி (C) மற்றும் டபிள்யூ (W) என்றால் என்ன?

ஏ.ஒ. (AO) குறியீட்டில், சி (‘C’) பொதுவாக ‘வட்டாரம்’ அல்லது பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மற்றும் டபிள்யூ (‘W’) என்பது ‘வார்டு’ என்பதைக் குறிக்கிறது’. இந்த கூறுகள் புவியியல் அதிகார வரம்பு மற்றும் குறிப்பிட்ட பகுதியை வரி மதிப்பீட்டு நோக்கங்களுக்காக அந்த அதிகார வரம்பிற்குள் அடையாளம் காண உதவுகின்றன

ஒற்றை பான் (PAN) கார்டுக்கு எத்தனை ஏ.ஒ. (AO) குறியீடுகள் ஒதுக்கப்படுகின்றன?

ஒரு பான் (PAN) கார்டுடன் தொடர்புடைய ஒற்றை ஏ.ஒ. (AO) குறியீடு மட்டுமே உள்ளது. உங்கள் வரி மதிப்பீட்டை பாதிக்கக்கூடிய அளவில் உங்கள் அதிகார வரம்பு அல்லது குடியிருப்பு முகவரியில் மாற்றம் இருந்தால், அதன்படி பான் (PAN) கார்டுக்காக உங்கள் ஏ.ஒ. (AO) எண்ணை நீங்கள் பெறலாம்.