பணச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அவை தங்கள் வருவாயில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவார்கள். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு மீதான சந்தையின் ஏற்ற இறக்கங்களின் வரம்பைப் புரிந்துகொள்ள, முடிவுகளை எடுக்க ஏற்ற இறக்கங்களை அளவிட வேண்டும். ஆனால், நீங்கள் எப்படி சந்தையின் ஏற்ற இறக்கங்களை அளவிடுவீர்கள்? இங்கு ஒரு ஏற்ற இறக்க குறியீடு உதவுகிறது. இது ஏற்ற இறக்க காரணிகளில் உள்ள மாற்றங்களை அளவிட சந்தை நிலவரங்களுக்கு எதிராக அந்தக் குறியீட்டைப் பயன்படுத்துகிறது. இந்திய பங்கு சந்தைகளில், இந்தியா VIX என்பது சந்தை அளவுகோலாக பயன்படும் ஒரு ஏற்ற இறக்க குறியீடு.
சந்தை ஏற்ற இறக்கங்கள் என்றால் என்ன?
புதிதாக தொடங்குபவர்களுக்கு,ஏற்ற இறக்கம் என்பது பத்திரங்களின் விலை அதிக ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுவதால் ஏற்படும் கணிக்கமுடியாத காலங்களைக் குறிக்கிறது. பொதுவாக மக்கள் ஏற்ற இறக்கங்களை விலை வீழ்ச்சியுடன் தொடர்புபடுத்திக்கொள்வார்கள். ஆனால், இது விலை ஏற்றத்துடன் நடக்கலாம்.
எது சந்தை ஏற்ற இறக்கங்களை உருவாக்குகிறது? கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பல காரணிகள் சந்தை செயல்பாட்டுக்கு பங்களிக்கின்றன.
- அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள்
- தொழில் மற்றும் துறையின் செயல்திறன்
- நிறுவனத்தின் செயல்திறன்
நீண்ட காலத்தில் ஏற்ற இறக்கங்கள் சாதாரணமானது. புற மற்றும் உள் காரணிகளைப் பொறுத்து பங்கின் விலைகள் ஏற்றம் அடைதல் மற்றும் வீழ்ச்சி அடைதல் போன்ற காலங்களுக்கு உட்படலாம். இந்தக் காலகட்டங்கள் நிலையற்றதாக இருக்கலாம். ஆனால், தவிர்க்க முடியாது.
இந்தியா VIX பொருள்
இந்தியா VIX என்பதுஇந்திய ஏற்ற இறக்க குறியீடு. இது NSE குறியீட்டில் அடுத்த முப்பது நாட்களுக்கு வர்த்தகர்கள் எதிர்பார்க்கும் ஏற்ற இறக்கங்களின் அளவை அளவிடுகிறது. எளிமையாக, இது முக்கிய சந்தை செய்திகளைப் பொறுத்து முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் சந்தையில் ஏற்படும் விலை மாறுபாடுகளின் கணக்கீடு ஆகும். குறியீட்டின் விலை குறைவு என்றால், அது சந்தையில் அபாயக் காரணி இல்லை என்பதைக் குறிக்கிறது. அதன் பொருள் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதே. மாறாக, ஒரு அதிக மதிப்பு என்பது நிலையற்ற தன்மைகள் மற்றும் அபாயக் காரணிகள் அதிகரிப்பதைக் குறிக்கிறது.
இந்தியா VIX, சந்தையில் 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், உண்மையில் ஏற்ற இறக்க குறியீடு என்பது சிகாகோ பங்கு சந்தையில் 1993 ஆம் ஆண்டில் முதலே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சந்தையில் உள்ள அபாயக் காரணிகளின் இருப்பை அளவிட உதவியது.
பங்கு சந்தையில் இந்தியா VIX என்றால் என்ன?
இந்தியா VIX என்பது என்எஸ்சி (NSE)யில் பயன்படுத்தப்படும் ஏற்ற இறக்கக் குறியீட்டின் மற்றொரு பெயர். இது கணக்கீட்டிற்கு ஐந்து மாறிகளைக் கருத்தில் கொள்கிறது – நிர்ணயிக்கப்பட்ட விலை, பங்கின் சந்தை விலை, காலாவதி தேதி, அபாயம் இல்லாத வருவாய்கள், மற்றும் ஏற்ற இறக்கங்கள். VIX என்பது சிறந்த ஏலம் மற்றும் விலையைத் தாண்டி கேட்கப்படும் நடப்பு, மற்றும் நடப்பு மாதத்தின் NIFTY முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் போன்றவற்றை வைத்து முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் ஏற்ற இறக்கத்தை அளவிடுகிறது.
VIX மற்றும் ஏற்ற இறக்கங்கள் எதிர் போக்கில் செயல்படும். ஒரு அதிகரித்த VIX சந்தையில் காணப்படும் அதிகரித்த ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது, மறுதலையாக ஒரு குறைந்த VIX, NIFTY-ல் உள்ள குறைந்த ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது.
வாருங்கள் ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.
VIX மதிப்பு 15 என்று கொள்க. இதன் பொருள் அடுத்த முப்பது நாட்களில் முதலீட்டாளர்கள் விலைகள் +15 மற்றும் -15 இடையே இருக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள். கருத்து ரீதியாக, VIX 15 மற்றும் 35 இடையே இருக்கலாம். 35க்கு மேல் உள்ள மதிப்புகளை விட 15 அல்லது கீழ் உள்ள எந்த மதிப்பும் குறைந்த ஏற்ற இறக்கத்தைக் குறிக்கின்றன. இது சந்தையில் உள்ள அதிக ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது. கடந்த காலத்தில், NIFTY மற்றும் VIX ஒரு எதிர்மறை உறவைக் கொண்டிருந்தன. அதன் பொருள் VIX 15க்கு கீழ் இருக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் NIFTY அதிகரித்தது.
பங்கு சந்தையில் உள்ள இந்தியா VIX சந்தை சுறுசுறுப்பின் குறியீடாக முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் ஏற்படும் பயம் அல்லது மனநிறைவைக் குறிக்கிறது.
இந்தியா VIX எப்படி கணக்கிடப்படுகிறது
இந்தியா VIX மதிப்பு ஒரு மேம்படுத்தப்பட்ட சூத்திரம், பிளாக்-ஸ்சோல்ஸ் மாதிரி எனப்படுவதில் இருந்து கணக்கிடப்படுகிறது. இது பொதுவாக பல்வேறு நிதி தயாரிப்புகள், குறிப்பாக நிதி பெறுதிகளின் விலையைத் தீர்மானிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கணக்கீடு வரும் மாதத்தில் NIFTY 50 குறியீட்டின் சாத்தியமான ஏற்ற இறக்கங்கள் கணிப்பில் பல முக்கிய கூறுகளை உள்ளடக்குகிறது. இங்கு அது எப்படி செய்யப்படுகிறது என்பது எளிய சிறு பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன:
- நிர்ணயிக்கப்பட்ட விலை (K): இது நிஃப்டி 50 குறியீட்டில் வாங்க அல்லது விற்க நிதி பத்திரங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலையாக உள்ளது. இது பொதுவாக லாபம் தராத நிதி பத்திரங்கள் அடிப்படையில் உள்ளது.
- பங்கின் சந்தை விலை (S): NIFTY 50 குறியீட்டு பங்குகளின் மிக சமீப வர்த்தக விலை.
- காலாவதியாகும் நேரம் (T): இது NIFTY 50 குறியீட்டு நிதி பத்திரங்கள் செல்லாததாக மாற மேலும் எவ்வளவு காலம் உள்ளது என்பதைக் குறிக்கிறது. இது பொதுவாக அதிகபட்சம் ஒரு மாதம் ஆகும்.
- அபாயம் இல்லாத விகிதம் (R): இது அரசு பத்திரங்கள் மீது பெறப்படுகிறது, பொதுவாக பாதுகாப்பான கருவி எனப்படுகிறது, மற்றும் VIX கணிக்கீட்டில் ஒப்பிட பயன்படுத்தப்படுகிறது. இது அரசு பத்திரங்கள் அடிப்படையிலானது, இங்கு, வருவாய் குறியீட்டு நிதி பத்திரங்களைப் போல ஒரே காலத்துடன் பொருந்துகிறது.
- ஏற்ற இறக்கங்கள் (σ): இது முக்கிய கூறு மற்றும் அடுத்த மாதத்திற்குள் NIFTY 50 குறியீட்டில் எதிர்பார்க்கப்படும் விலை மாற்றத்தின் தீவிரம் தொடர்பானது. இது நேரடியாக உணரப்படுவதில்லை. ஆனால், NIFTY 50 குறியீட்டு நிதி பத்திரங்களில் இருந்து பெறப்படுகிறது.
சுருக்கமாக, நாம் நடப்பு விலை மற்றும் நிதி பத்திரங்களுக்கு மீதமுள்ள நேரத்தை பார்த்தோம் என்றால், கிடைத்த சந்தை தரவைப் பயன்படுத்தி எதிர்பார்க்கப்படும் ஏற்ற இறக்கங்கள் மதிப்பிடப்பட வேண்டும்.
பங்கு சந்தையில் இந்தியா VIXஸைப் புரிந்துகொள்ளுதல்
இந்தியா VIX என்பது முதலீடு செய்வதற்கு முன் சந்தையின் சுறுசுறுப்பைப் புரிந்துகொள்வதற்கு மிக முக்கியமானது. அனைத்து முக்கிய போக்கு சார்ந்த சந்தை நிலவரங்கள் சந்தை சுறுசுறுப்பைத் தொடர்வதால், இந்தியா VIX முதலீட்டாளர்களின் நம்பிக்கை அல்லது பயத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஒரு குறைவான VIX குறைந்த ஏற்ற இறக்கம் மற்றும் சொத்து விலைக்கான ஒரு நிலையான வரம்பைக் குறிக்கிறது.
- ஒரு அதிக VIX அதிக ஏற்ற இறக்கம் மற்றும் முதலீட்டாளர்கள் இடையே நடப்பு சந்தை வரம்பிற்குள் வர்த்தகம் செய்யும் நம்பிக்கை இல்லாமல் போகிறது. பொதுவாக, இது விரிவாகும் நடப்பு வரம்புடன் சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க போக்கு சார்ந்த நகர்வின் ஒரு குறியீடு.
ஏற்ற இறக்கம் மற்றும் இந்தியா VIX ஒரு நேர்மறை தொடர்பைக்’கொண்டுள்ளன. அதன் பொருள் ஏற்ற இறக்கம் அதிகம் என்றால், இந்தியா VIXஸின் மதிப்பும் அதிகம். உதாரணமாக, கோவிட்க்கு முந்தைய சூழலில், நிலைப்புத்தன்மையைக் குறிக்கும் வகையில் 2014-ல் இருந்து இந்தியா விஐஎக்ஸ் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக 30 கீழே இருந்தது. ஆனால், பெரும்தொற்று ஏற்பட்டது முதல், இந்தியா VIX மதிப்பு 50 யைத் தொட்டுவிட்டது. அதே காலத்தில், ஈக்குவிட்டி குறியீடு அதன் மதிப்பில் 40% சதவீதத்தை இழந்தது மற்றும் 8000 எனும் அளவில் வணிகம் செய்யப்பட்டது.
எனினும், நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய புள்ளி இந்தியா VIX போக்கின் திசையைக் குறிக்காது. அது ஏற்ற இறக்கக் காரணிகளின் ஏற்றம் அல்லது வீழ்ச்சியை மட்டுமே எடுத்துக்கொள்ளும். எனவே, ஈக்குவிட்டிகள் மீது அதிகம் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் இந்தியா VIXஸின் மதிப்பைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கடுமையான வரம்பில் சந்தை நகர்ந்தால் அதிகபட்ச ஏற்ற இறக்கம் நிகழ்வுகள் மற்றும் காலங்கள் இருக்கலாம். ஆனால், இந்தியா VIX மீண்டும் தனது சராசரிக்கே 15-35 வரும் தன்மை கொண்டுள்ளது. இந்தியா VIX பூஜ்யத்தை அடையும் சூழ்நிலையும் இருக்கலாம். இந்தச் சூழ்நிலையில், குறியீடு இரட்டிப்பு ஆகலாம் அல்லது பூஜ்யமாக மாறலாம்.
VIXஸைச் சுற்றி வணிகத்தைத் திட்டமிடல்
VIX, 30 நாட்கள் காலத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் ஏற்ற இறக்கங்களைக் கணக்கிடுகிறது. எனவே, அது நடப்பு மாதத்துடன் காலாவதி ஆகும் நிதி பத்திரங்களைப் பயன்படுத்துகிறது மற்றும் கணக்கீட்டிற்கு அடுத்த மாதத்தைப் பயன்படுத்துகிறது. இது விற்கப்படும் நிதி பத்திரத்தின் சந்தாவை NIFTY ஆக கருதுவது ஒட்டுமொத்த சந்தையின் மறைமுக ஏற்ற இறக்கத்தின் ஒரு பிரதிபலிப்பாக உள்ளது.
இந்தியா VIX சந்தை ஏற்ற இறக்கத்தின் சிறந்த அளவீடாக NIFTY நிதி பத்திரங்களின் கோரிக்கை புத்தகத்தைச் சராசரி படுத்துவதை கருத்தில் கொள்கிறது. அது ஒரு சிக்கலான புள்ளியியல் சூத்திரத்தைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இது வர்த்தகத்தைத் திட்டமிடுதல் என்பதில் எதை குறிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- அதே நாள் வர்த்தகம் செய்பவருக்கு, இந்தியா VIX சந்தை அபாயத்தின் சிறந்த அளவீட்டை வழங்குகிறது. அது வர்த்தகர்களுக்கு, பங்குகள் எப்போது ஏற்றம் அடையும் அல்லது சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மாறும் போது வீழ்ச்சியடையும் என்பது பற்றிய ஒரு கருத்தை அளிக்கிறது. உதாரணமாக, VIX மதிப்பு அதிகரித்தால், அதே நாள் வர்த்தகம் செய்பவர் அவர்களது ஸ்டாப் லாஸ் அளவைச் செயல்படுத்தும் அபாயம் உள்ளது. அதற்கேற்ப, இவர்கள் தங்களது பயன்களைக் குறைக்கலாம் அல்லது ஸ்டாப் லாஸை அதிகரிக்கலாம்.
- நீண்ட கால முதலீட்டாளர்கள் குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் பற்றி கவலை பட மாட்டார்கள். ஆனால், நீண்ட காலத்தில் நிறுவன முதலீட்டாளர்கள் சந்தையில் தங்கள் ஒப்பந்தங்கள் மீது அதிகமான பங்குகள் வாங்குவது விற்பதற்காக தங்கள் காப்புறுதியை எடுத்துக்கொள்ளும்போது ஏற்றமடையும் இந்தியா VIX அதிகரிக்கும் நிலையற்ற தன்மைகளைச் சிறப்பாக அளவிடுகிறது.
- நிதி பத்திர வர்த்தகர்கள் வாங்குவது மற்றும் விற்பதற்கு ஏற்ற இறக்க அளவுகளை அதிகமாக சார்ந்துள்ளனர். உதாரணமாக, ஏற்ற இறக்கங்கள் அதிகரித்தால், நிதி பத்திரங்கள் வாங்குபவர்களுக்கு அதிக மதிப்பு மற்றும் பலன் அளிக்கும். மாறாக, ஏற்ற இறக்கங்கள் குறைந்தால், நிதி பத்திரங்கள் காலாவதி ஆவதால் அதன் மதிப்பை இழக்க தொடங்குகின்றன.
- ஏற்ற இறக்கங்களில் வர்த்தகம் செய்வதற்கு சில வழிகள் உள்ளன. சந்தை ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கும்போது வர்த்தகர்கள் ஸ்ட்ராடில்கள் அல்லது ஸ்ட்ராங்கிள்கள் வாங்கலாம். ஆனால், இந்த வர்த்தக உத்திக்கு அதிக செலவு ஆகும். எனவே, அதற்கு மாற்றாக, சந்தை போக்கு பற்றி கருதாமல் ஒருவர் VIX குறியீட்டு மதிப்பு குறையும் நிதி ஒப்பந்தங்களை விற்கலாம்.
- இந்தியா VIX மற்றும் NIFTY ஒரு எதிர்மறை உறவைக் கொண்டுள்ளன. VIX தொடங்கி ஒரு ஒன்பது வருட காலத்தை வரைபடமாக்கினால், NIFTY எதிர் நகர்வைக் காட்டுகிறது. எனவே, VIX மதிப்பு குறைவு, NIFTY அதிகரிக்கிறது மற்றும் நேர்மாறாகவும் உள்ளது. இது சந்தை நடத்தை பற்றி ஒரு சிறப்பான கருத்தை அளிக்கிறது.
- இந்தியா VIX மதிப்பு உச்சம் அடைந்தால், போர்ட்ஃபோலியோ மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள் உயர் பீட்டா போர்ட்ஃபோலியோவில் தங்களை அதிகமாக வெளிப்படுத்துவார்கள். அதேபோல், VIX மதிப்பு குறைவாக இருக்கும்போது குறைந்த பீட்டா பங்குகளைத் தேர்வு செய்யலாம்.
- விற்பவர்களுக்கு இந்தியா VIX மிக முக்கியமானது. உயர் VIX மதிப்பு விற்பவர்களுக்கு அளவற்ற அபாயம் மற்றும் வரையறுக்கப்பட்ட பலன்களுக்கான (உயர் மதிப்பு) வாய்ப்பை அளிக்கிறது. சந்தை அதிக ஏற்ற இறக்கக் கட்டத்திற்குள் செல்வதால், அவுட் ஆப் மணி ஆப்சன்ஸ் கான்ட்ராக்ட்கள் பணமாக மாறலாம் அல்லது சில வர்த்தக அமர்வுகளில் பண ஒப்பந்தங்களாக மாறலாம்.
ஒரு ஒப்பந்தத்தை எழுதும்போது விற்பவர்கள் எப்படி VIX மதிப்பைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம். நடப்பு விலை ரூ.310-ல் கொண்ட ஏபிசி பங்குகளுக்கு விற்பவர் ரூ 275-ல் ஒரு ஒப்பந்தம் எழுத முடிவு செய்கிறார். அவர் ரூ 10 சந்தாவில் ஏழு நாட்களில் காலாவதியாகும் ஒப்பந்தத்துடன் 3000 பங்குகளை விற்க முடிவு செய்கிறார். சந்தையின் நடப்பு ஏற்ற இறக்க வரம்புடன், ஒப்பந்த விலைகள் இரண்டு நாட்களில் ரூ 230 ஆக குறையலாம். எனவே, 5 நாட்களுக்கு பின் அவரது நஷ்டம்.
எதிர்கால விலை ரூ 275
நடப்பு விலை ரூ 230
சந்தா ரூ 10
அவர் ரூ (230+10) – ரூ 275 or ரூ 35 நஷ்டத்தைப் பெறுகிறார். அவரது மொத்த இழப்பு ஒரு லாட்டிற்கு ரூ 105,000. எனவே, உண்மையில், அவர் ஒப்பந்தம் எழுதுவதைத் தவிர்ப்பார் அல்லது எழுதும் பட்சத்தில் ஒரு அதிக சந்தாவை கட்டணமாக வசூலிப்பார்.
முடிவுரை
இந்தியா VIX என்பது சந்தையில் எதிர்பார்க்கப்படும் ஏற்ற இறக்கங்களை அளவிட பயன்படும் ஒரு ஏற்ற இறக்கக் குறியீடு. இது எதிர்பார்க்கப்படும் பங்குகளின் விலை நகர்வைக் கணக்கிடும் ஒரு திறன்மிக்க கருவி.
வரலாற்று ரீதியாக, அதிக VIX மதிப்புகள் பங்கு விலை மற்றும் குறியீடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வால் குறிக்கப்படுகிறது. இது பெறப்பட்ட ஒப்பந்த விலைகள் மற்றும் சந்தாக்களைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்போது நீங்கள் இந்தியா VIXஸின் பொருள் பற்றி அறிந்து கொண்டீர்கள், நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யுங்கள்.
FAQs
சந்தை ஏற்ற இறக்கங்கள் என்றால் என்ன?
சந்தை ஏற்ற இறக்கம் என்பது ஈக்குவிட்டி சந்தையில் பங்கு விலைகளில் ஏற்படும் பெரிய ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது. பொதுவாக, அதிக ஏற்ற இறக்கம் கொண்ட பத்திரங்கள் அபாயம் கொண்டவை.
இது அதே பத்திரங்கள் அல்லது குறியீட்டின் பங்கு விலையில் திட்ட விளக்கமாக அளவிடப்படுகிறது.
இந்தியா VIX என்றால் என்ன?
இந்தியா VIX என்பது 2008-ல் அறிமுகப்படுத்தப்பட்ட NIFTYன் ஏற்ற இறக்க குறியீடு. இது சிறந்த ஏலம் மற்றும் NSE சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்ட மாதத்தின் நடுவில் விலையைத் தாண்டி கேட்கப்படும் NIFTY தேர்வு ஒப்பந்தங்கள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இது எதிர்காலத்தில் ஏற்ற இறக்கங்கள் மீதான முதலீட்டாளர்களின் உணர்வைக் குறிக்கிறது.
இந்தியா VIX எதை பரிந்துரைக்கிறது?
இந்தியா VIX சந்தை ஏற்ற இறக்கங்களை அளவிடுகிறது. அதிக இந்தியா VIX மதிப்பு அதிக ஏற்ற இறக்கங்கள், மற்றும் குறைந்த மதிப்புகள் சந்தை நிலைப்புதன்மையைக் குறிக்கிறது. வரலாற்று ரீதியாக, இந்தியா VIX மற்றும் NIFTY ஒரு வலிமையான எதிர்மறை தொடர்பைப் பிரதிபலிக்கின்றன. அதன் பொருள், ஏற்ற இறக்கம் அதிகரித்தால், NIFTY வீழ்ச்சி அடைகிறது, மற்றும் அதற்கு நேர்மாறாக நடைபெறுகிறது.
இந்தியா VIXஸின் மதிப்பு என்ன?
இந்தியா VIX சராசரியாக 15-35 எனும் அளவில் நகர்கிறது. எனினும், சில சூழ்நிலைகளில் அது மிக குறைந்த அல்லது மிக அதிகமான மதிப்புகளைப் பெறலாம். இந்தியா VIX பூஜ்யமாகும் போது, குறியீடு ஒன்று இரட்டிப்பு அடையலாம் அல்லது பூஜ்யம் ஆகலாம்.
எனினும், இந்தியா VIX என்பது திசையற்றது, இதன் பொருள் அது சந்தை எந்தத் திசையில் திரும்பும் என்பதைக் குறிக்காது. எளிமையாக அடுத்த முப்பது நாட்களுக்கு முதலீட்டாளர்கள் ஏற்ற இறக்கத்தை எதிர்பார்ப்பதைக் குறிக்கிறது.
யார் இந்தியா VIXஸைப் பயன்படுத்தலாம்?
இந்தியா VIX முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், விற்பவர்கள், போர்ட்போலியோ மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள் உட்பட பரவலான சந்தை நிபுணர்களால் பயன்படுத்தப்படுகிறது. இவர்கள் VIXஸின் நகர்வை பின்பற்றி தங்கள் சந்தை எதிர்பார்ப்புகள் மற்றும் பீட்டா வெளிப்படுத்தலை சரி செய்து கொள்வார்கள்.
இந்தியா VIX எப்படி பங்கு விலைகளைப் பாதிக்கிறது?
இந்தியா VIX என்பது சந்தை ஏற்ற இறக்கத்தின் ஒரு அளவீடு. பொதுவாக, இந்தியா VIX அதிகரித்தால், நிஃப்டி வீழ்கிறது. இது பங்குகளை வாங்குவதற்கான நல்ல நேரத்தைக் குறிக்கிறது.
மிக குறைவான இந்தியா VIX மதிப்பு என்றால் என்ன?
இந்தியா VIX 15-35 வரம்பிற்குள் நகர்வதால், 35 க்கு மேற்பட்ட ஏதேனும் மதிப்பு அதிக ஏற்ற இறக்கத்தின் தன்மையைக் குறிக்கிறது. இந்தியா VIXஸின் மதிப்பு சந்தையில் அபாயக் காரணிகளால் ஏற்படும் அதிகரித்த குழப்பக் காலங்களில் அதிகரிக்கிறது.
இந்தியா VIX மற்றும் NIFTY இடையேயான உறவு என்ன?
இந்தியா VIX மற்றும் NIFTY ஒரு வலிமையான எதிர்மறை தொடர்பைப் பிரதிபலிக்கிறது. இந்தியா VIX ஏற்றம் கண்டால், NIFTY வீழ்ச்சியடைகிறது. மாறாக, VIX வீழ்ச்சியடைந்தால், NIFTY ஏற்றமடைகிறது மற்றும் குறையும் ஏற்ற இறக்கங்களால் முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
NIFTY VIXஸில் எப்படி வர்த்தகம் செய்வது?
ஏற்ற இறக்கக் குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ள பரிமாற்றம் செய்யப்பட்ட வர்த்தகப் பங்குகளை வாங்குவது NIFTY VIXஸில் வர்த்தகம் செய்வதற்கான ஒரு வழி.